அறிமுகம் மற்றும் முதற் பாகம் ஆகியன பார்க்க…

மகள் அபர்ணாவின் விவாஹம் காயத்ரி வர ப்ரசாத்துடன் நன்கு ஆயிற்று.  நம் சுப்பாராவ் அவர்களுக்கு  காயத்ரி மந்திர உச்சாடனத்திற்கு மேலும் சிறிது நேரம் கிடைத்தது. வாய்ப்பை நன்கு பயன்படுத்திய அவர் ஒரு நாளில் கூடுதலாக சில மணி நேரங்கள் ஜபம் செய்ய, அது மொத்த ஜப எண்ணிக்கையையும் கணிசமாக அதிகரித்தது.

அந்த ஒரு நாள் வரை…

அன்று தனது ப்ரத்யேக பூஜை அறையில் அமர்ந்து கொண்டு சுப்பாராவ் அவர்கள் மந்த்ர ஜபம் செய்து கொண்டிருக்கையில் திடீரென்று தன் உடம்பு லேசாக குலுங்குவது போலவும் சில மெல்லிய அதிர்வுகளையும் உணர்ந்தார்.  மந்த்ர ஜபம் தொடர்ந்து கொண்டேயிருந்தது. அதை நிறுத்தக் கூடாதென்பது அவருக்குத் தெரியுமல்லவா?
ஆனால், அவர்தம் ஐம்புலன்களையும் தன் முழுக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, முன்பு தன்னை காயத்ரி மந்த்ர ஜபம் செய்யுமாறு பணித்த அதே வசீகரக் குரல், அந்த அறையில் அன்று மறுபடியும் அவருக்குக் கேட்டது. பல வருடங்களுக்குப் பின் அக்குரல் கேட்டதும்,  திடுக்கிட்ட அவர் உடனடியாகத் தன் கண்களைத் திறந்தார். அப்போது அக்குரல் அதே இசைமயமான தொனியில்…

அன்பு சுப்பாராவ்…மிகுந்த ஒழுக்கத்துடன் நீ காயத்ரி மந்த்ர ஜபம் செய்து வருவது எனக்கு மிக மகிழ்ச்சியளிக்கிறது. நீ உடனடியாக கோதாவரி நதிக்கரையில் இருக்கும் புனிதஇடமான பாசராவிற்குச் செல். அவ்விடம் ஞான ஸரஸ்வதி தேவியினுடையதாகும். மஹரிஷி வேத வ்யாஸர் இந்நதிக்கரையில் பெரும் தவமியற்றி, பின் அவரே இத்தலத்தின் தேவியை ப்ரதிஷ்டை செய்து ஞான ஸரஸ்வதி என்ற பெயருமிட்டார்.

“உன் ஜபத்தை அங்கே வேத ஞானத்தின் இருப்பிடமாம் ஞான ஸரஸ்வதி தேவியின் சாநித்யத்தில் தொடருவாயாக. உனக்கு சர்வ மங்களமுண்டாகட்டும். செல்…!

சுப்பாராவிற்கு பல மணி நேரங்கள் ஆன பின்பும் அக்குரல் என்ன செய்தி சொல்லிற்று என்று முற்றிலுமாகப் புரியவில்லை. அவர் மிகுந்த குழப்பமடைந்தார். அதற்குக் காரணங்கள் இரண்டிருந்தன…
முதலில்…பாசரா கோவிலைப் பற்றி இரண்டொரு முறை கேள்விப்பட்டிருந்தாலும் அது எங்குள்ளது என்பதோ அங்கே எப்படிச் செல்வது என்பதோ தெரியாது அவருக்கு.
இரண்டாவது…என்னதான் பாசரா கோவில் எங்குள்ளது என்பதைக் கண்டறிய முடிந்தாலும், காயத்ரி தேவி எதற்காகத் தன்னை அங்கு, அதுவும் ஸரஸ்வதி தேவியின் கோயிலுக்குச் செல்லுமாறு பணிக்கிறாள்?
“…நான் காயத்ரி தேவியின் பக்தன். அவளுக்கு மட்டுமே பக்தன். எனக்கு அவளிடமிருந்து தெளிவான காரணம் கிடைக்கும் வரையில் நான் வேறெந்த கோயிலுக்கும் செல்ல மாட்டேன்…அது எவ்வளவு புனிதமானதாக வேண்டுமானாலும் இருக்கட்டுமே. நான் ஏன் செல்ல வேண்டும்? எதற்காக செல்வேன் நான்? ஒரு வேளை நான் நினைப்பது தவறாக இருக்கலாம்…ஆனால் நான் அப்படித்தான்.” – சுப்பாராவ் எண்ணமிட்டார்.
அவர் உங்களையும் என்னையும் போன்ற சாதாரண மனிதர் தானே? மனித மனம் எப்படி எண்ணமிடுமோ அதைப் போலவே அவர் மனமும் எண்ணியது. ஆனால் ஒரு தாயைத் தவிர தன் சேயின் மனப்போக்கை யார் சிறப்பாக அறிய முடியும்? மாதா காயத்ரி தேவி தன் பக்தன் சுப்பாராவின் மனப்போக்கை நன்கு அறிந்தவளாகையில்…
தான் சொல்ல வந்தது என்ன என்பதை சுப்பாராவிற்கு அவள் அவருடைய மனப்போக்கிலேயே சென்று காட்டியருள திருவுளம் கொண்டாள்…
அன்றைய இரவிலும் சரி, பின் வந்த சில இரவுகளிலும் சுப்பாராவ் பெரும்பாலானவர்கள் போல கவலையின்றி தூங்கினார். அந்தக் குரல் என்ன சொல்லிற்று என்பதைப் பற்றி அவர் ரொம்பவும் கவலைப்படவில்லை. தன் அபிப்ராயத்தில் மாற்றமில்லை. இனி பதில் அவள் தானே தர வேண்டும் என்று எண்ணினார் போலும். நான்காம் நாள் தன் புத்தக அலமாரியில் ஒரு கணக்குத் தாள்களைத் தேடிக்கொண்டிருந்த போது ஒரு செய்தித்தாளின் சிறிய கத்தரித்த பகுதியொன்று அலமாரியிலிருந்து நழுவி கீழே விழுந்தது.
அவர் கீழே குனிந்து அதை எடுத்தார், மேலோட்டமாக என்ன இருக்கிறது அதில் என்று பார்த்தார்… அதை முழுவதுமாகப் படித்து முடித்த பின்னர் சில விநாடிகள் உறைந்தவரைப் போல நின்றிருந்தார். அதில் பின்வருமாறு எழுதியிருந்தது…
“மாதா காயத்ரி தேவி பகலில் காயத்ரியாகவும், மதியம் சாவித்ரி தேவியாகவும் இரவில் ஸரஸ்வதி தேவியாகவும் வணங்கப் பெறுகிறாள். மற்றபடி இவர்கள் அனைவரும் ஒருவரே…”
காயத்ரி மந்த்ரத்தைப் பற்றியும் காயத்ரி தேவியைப் பற்றியும் அந்த செய்தித்தாள் பகுதியில் கண்டிருந்தது. “இதோ அவள் பதிலுரைத்து விட்டாள், மிகத் தெளிவாக…” சுப்பாராவ் எண்ணினார். மறுகணம், சிறிதும் தாமதிக்காமல் தன் மாமனாரைக் கூப்பிட்டு பாசரா கோவிலைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்கத் தொடங்கினார்.
சுப்பாராவின் மாமனார்-மாமியார் முன்னர் இருமுறை பாசரா கோவிலிக்குச் சென்றிருந்தபடியால் அவர்கள் சில முக்கியமான தகவல்களைத் தர முடிந்தது. அங்கு வேலை செய்யும் முக்கியமான ஒருவரது விவரங்களையும் அவர்கள் தந்தனர். சுப்பாராவ் தன் துணைவியார் வேங்கடலக்ஷ்மியிடம் கலந்தாலோசித்த பின் பாசரா செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினார்.
ஆனால் உலகின் மிகப் புனிதமான இடங்களில் ஒன்றான பாசராவில் சுப்பாராவிற்கு என்னென்ன திடுக்கிடும், மயிர்கூச்செறியச் செய்யும் அனுபவங்கள் காத்திருந்தன என்பதை அவர் அறிய மாட்டார்.
ஆனால் அதையெல்லாம் நாம் தெரிந்து கொள்வதற்கு முன்னர் பாசரா பற்றி சில முக்கியமான தகவல்களை அறிந்து கொள்வது அவசியம்…

Baasara Gnana Saraswathi Devi

பாசரா, கோதாவரி நதிக்கரையின் அடிலாபாட் என்னுமிடத்திலுள்ள ஒரு சிறிய கோவில் நகரம். பெரிய வளர்ச்சி எதுவுமின்றி பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்ட ஒரு நகரம் எப்படியிருக்குமோ அப்படி ஒரு தோற்றம் கொண்டது, இன்றைய தெலுங்கானாவில் இருக்கிறது இந்நகரம். பாரத தேசத்திலேயே மிகப் புகழ் பெற்ற, மிக சக்தி வாய்ந்த ஸரஸ்வதி தேவி கோவில்கள் இரண்டு. அதில் ஒன்று ஜம்மு காஷ்மீரிலும் மற்றொன்று பாசராவில் இருக்கும் ஞான ஸரஸ்வதி தேவி கோவிலுமாகும்.
மஹாபாரதப் போர் முடிந்ததும் வ்யாஸ மஹரிஷி ஒரு புனிதமான இடத்தில் தவமியற்ற விரும்பினார். பல தேடல்களுக்குப் பிறகு பாசராவை தன் தவத்திற்கு ஏற்ற இடமாகக் கருதி தன் சீடர் பெருமக்களுடன் தங்கி, அருந்தவம் இயற்றி அதன்மூலம் தான் முன்பு அறிந்திராத பெரும் ஞானமடைந்தவருமானார்.
ஆச்சர்யமடைந்த வ்யாஸ தேவர் ஞானத்திற்கும் கல்விக்கும் அதிபதியான ஸரஸ்வதி தேவியின் சாநித்யம் இந்த இடத்தில் மிக ப்ரத்யக்ஷமாக இருப்பதை கண்டு கொண்டார். உடனே கோதாவரி நதிக்கரையிலிருந்த மண்ணைக் கொண்டு ஸரஸ்வதி தேவியின் மண்ணுருவச் சிலையை செய்தும் முடித்தார்.
பின்னர் தன் தவ வலிமையைக் கொண்டு அம்மண்ணுருவத்தினுள் உயிரேற்ற ஞான ஸரஸ்வதியை ஆவாஹனம் செய்தருளினார். அவ்விடமே இன்றைய பாசராவில் ஞான ஸரஸ்வதி வீற்றிருக்கும் பீடமாகும். மேலும் ஆச்சர்யகரமாக, ஆவாஹனம் செய்யும் பொழுது தன்னையறியாமல் தன்  நாவில் தோன்றிய ஒரு மிக சக்தி வாய்ந்த ஒரு ஸ்லோகத்தைக் கூறியபடியே, ஸரஸ்வதி தேவியை அச்சிலைக்குள் உருவேற்றினார்.
காலப்போக்கில் ஸரஸ்வதி தேவியை உபாஸிப்பவர் மத்தியில் இந்த ஸ்லோகம் மிகப் ப்ராபல்யமடைந்தது. வ்யாஸ தேவரும் “…தொடர்ந்து பாராயணம் செய்பவர்களுக்கு இந்த ஸ்லோகம் அளப்பரிய ஞானத்தையும் கல்வியையும் தந்து ஜபிப்பவரை வாழ்வின் பல அம்சங்களைப் பற்றிய மேன்மையான அறிவையும் தந்தருளும்” என்று அருளியிருக்கிறார்.
வ்யாஸ மஹரிஷி தங்கி அருந்தவம் இயற்றியதால் இவ்விடம் வாசரா என்றழைக்கப் பெற்றுப் பின் காலம் செல்லச் செல்ல இங்கு தங்கியிருந்த மக்கள் பேசிய மராத்தி மொழியினால் மருவி பாசரா என்றானது.
வ்யாஸரால் ஞான ஸரஸ்வதி என்றழைக்கப்பட்ட இத்தேவியின் ஆலயம் “பாசரா ஞான ஸரஸ்வதி தேவி ஆலயம்” என்று ப்ராபல்யமடைந்தது. பாரத தேசத்தின் பல இடங்களிலிருந்தும் மக்கள் தங்கள் குழந்தைகளை இந்த திவ்ய ஸதலத்திற்கு அழைத்து வந்து அக்ஷராப்யாஸம் செய்து வைப்பதுண்டு.
அது சரி, வ்யாஸ மஹரிஷியின் திருவாயிலிருந்து மலர்ந்த அந்த மஹிமை வாய்ந்த ஸ்லோகம் தான் என்ன? இதோ…
“ஷரதிந்து ஸமாகாரே பரப்ரம்ஹ ஸ்வரூபிணே
வாஸரா பீட நிலயே ஸரஸ்வதி நமோஸ்துதே” || – தமிழ்
“..Shara Dindhu Samaa Kaare Parabrahma Swaroopine..Vaasaraa Peetha Nilaye Saraswathee Namosthuthey..”
“..శరదిందు శమాకారే పరబ్రహ్మ స్వరూపినే.. వాసరా పీట నిలయే సరస్వతీ నమోస్తుతే..” (Telugu)
“..शरदिंदु समाकारे, परब्रह्म स्वरूपिणे |वासरा पीठ निलये, सरस्वती नमोस्तुते..” (Hindi)
தயைகூர்ந்து குறித்துக் கொள்ளுங்கள். கல்வி, பொழுது போக்கு மற்றும் ஆக்கபூர்வமான வேலைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் இந்த ஸ்லோகத்தை தினமும் நான்கு முறையேனும் ஜபித்து வர, மிகச் சிறந்த பலனுண்டாகும். இக்கட்டுரையை ஆங்கிலத்தில் எழுதியிருக்கும் ஸ்ரீமான் நரேன் ஆதித்யா அவர்கள் சுமார் இருபத்தி ஐந்து ஆண்டுகளாக இந்த ஸ்லோகத்தை ஜபித்து வருகிறார். அதன் மஹிமையே அவர் இன்றளவில் எழுத்தில் சிறந்து விளங்கக் காரணமாய் இருப்பதாக மிகத் திண்ணமாக நம்புகிறார்.
சரி…நம் சுப்பாராவிடம் வருவோமா?
ஏப்ரல் மாதம் 2002 ஆம் ஆண்டு இரவு சுமார் 8.30 மணி…

Gnana Saraswathi Devi

சுப்பாராவ் தன் மனைவி வேங்கட லக்ஷ்மியுடன் பாசரா வந்தடைந்தார். பல முயற்சிகளுக்குப் பின் பசு மடத்திற்கு அருகில் இருக்கும் ஒரு சிறிய அறை அவர்களுக்குத் தங்குவதற்காகக் கிடைத்தது.
கோடை காலம் ஆரம்பமாகி விட்டிருந்தது. சுப்பாராவின் மாமனாரவர்கள் முன்பே எச்சரித்திருந்தார்…”கோடை உக்கிரமாகும் சமயத்தில் அங்கு 45 முதல் 46 டிகிரி வரை வெப்பம் தாக்கக் கூடும். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் எடுக்காமல் போனால் மிகுந்த ச்ரமத்திற்கு ஆளாக நேரிடும்…” என்று.
நம் சுப்பாராவிடமிருந்து அதற்கும் தன் ப்ரத்யேக புன்னகையையே பதிலாக வந்தது.
ஹிந்து தர்ம ஸாஸ்திரத்தின் படி எந்த ஒரு தீக்ஷையையும் குறைந்த பக்ஷம் நாற்பது நாட்கள் தொடர வேண்டியது அவசியம். கோடையின் உக்ரம் கடுமையாக இருக்கும் என்பதை நன்கு அறிந்திருந்தும் சுப்பாராவும் வேங்கட லக்ஷ்மியும் பாசராவில் நாற்பது நாட்கள் தங்குவதென்று தீர்மானித்து விட்டிருந்தனர்.
சுப்பாராவிற்கோ மாதா காயத்ரி துணையிருக்கிறாள் என்பதும் எவ்வித இடர்பாடுகளிலிருந்தும் தன்னை அவள் காத்தருள்வாள் என்பதும் தீர்க்கமாகத் தெரிந்திருந்தது. வேங்கட லக்ஷ்மியோ தன் கணவனின் பால் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தார். தன்னை எந்த மோசமான வானிலை மாற்றங்களிலிருந்தும் அவர் காப்பார் என்ற நம்பிக்கையில் கண்களை மூடிக்கொண்டு சுப்பாராவ் பின்னால் கிளம்பி விட்டார். எப்படி ஒரு தம்பதி பாருங்கள்…?
ஏப்ரல் மாதம் நான்காம் தேதி அதிகாலை சுமார் 4.30 மணியளவில் தன் ஜபத்தைத் தொடங்கினார் சுப்பாராவ். அவருக்கு பின்வரும் 40 நாட்களும் எத்துணை வகையான இன்னல்களைத் தரப்போகின்றதென்றோ, எத்துணை விதமான ஆன்மிக அனுபவங்கள் ஏற்படப் போகின்றதென்பதோ, எத்தனை முறை மாதா காயத்ரி அவருடன் உரையாடப் போகிறாள் என்பதோ, எதுவும் தெரியாது…
பலவித இன்னல்களுக்கு அவர் ஆட்பட்ட பிறகே சுப்பாராவிடம் காயத்ரி தேவி ஏன் அவரை வ்யாஸ மஹரிஷி தவமியற்றி, பின் ப்ரதிஷ்டை செய்த ஞான ஸரஸ்வதி தேவியின் ஆலயத்தில் வந்து ஜபம் செய்யப் பணித்தாள் என்பதை விளக்கினாள்.
ஓ…இதையெல்லாம் சொல்வதற்கு முன்னர்…நண்பர்களே…
ஒரு முக்கிய விஷயத்தை நன்கு தெளிவுபடுத்திவிட விழைகிறேன். பாசராவில் தனக்கு ஏற்பட்ட ஆன்மிக அனுபவங்கள் எதையும் தெய்வீகக் காரணம் ஏதோ ஒன்றினால் கொண்டு சுப்பாராவ் அவர்கள் வெளி உலகிற்கு இது வரை வெளியிடவில்லை. திரு. பிவிஆர்கே அவர்கள் “ஸ்வாதி” தெலுங்கு வார இதழில் எழுதிய கட்டுரைகளிலும் இது வெளிவரவில்லை..

Meditation

ஆனால் அவர் அத்திகைப்பூட்டும் அனுபவங்களை…ஒவ்வொரு விவரங்களையும் விலாவாரியாக என்னிடம் அனுப்பி நான் இப்போது கூறத்தொடங்கியிருக்கும் இக்கட்டுரைகளில் வாயிலாக உலகிற்கு வெளியிடச் சொல்லியிருக்கிறார். அவ்வனுபவங்களை எல்லாம் தன்னிடம் இருந்த ஒரு ஏட்டில் குறித்து வைத்திருந்து, அவற்றையெல்லாம் ஸ்கேன் செய்து PDF வடிவத்தில் அக்காகிதங்களை என்னிடம் அனுப்பியிருக்கிறார்.

Please Click Here to read the English version of this part of the story

 

Love

Ramesh Krishnamurthy

tirurameshkrishna@gmail.com

https://www.facebook.com/RameshKrishhna

Original Story In English By

Narrenaditya Komaragiri

narrenaditya@tirumalesa.com

www.facebook.com/narrenaditya

Please Click Here to know more about this author

Facebook Comments